Categories
மாநில செய்திகள்

பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு …!!

பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் இது பற்றி ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி 75 ரூபாய் மதிப்புள்ள நினைவு நாணயத்தை காணொளிக்காட்சி வழியாக பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்தல் மற்றும் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார்.

Categories

Tech |