Categories
உலக செய்திகள்

லோ கட் ஜாக்கெட் போட்ட பிரதமர்… எழுந்து வரும் எதிர்ப்புகள்… ஆதரவாக கொந்தளிக்கும் பெண்கள்…!!!

பின்லாந்து நாட்டின் பிரதமர் லோ கட் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளதால், அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பெண்களின் உரிமை ஆர்வலரும் பின்லாந்தின் மைய இடது சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சன்னா மரின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்ரெண்டிங் ஆன பத்திரிக்கையில் அட்டைப்படத்தில் காட்சியளித்தார். அதில் லோ கட் ஜாக்கெட் மற்றும் அழகான நெக்லஸை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ளார். அவர் லோகட் ஜாக்கெட் பணிந்து வெளியான புகைப்படம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

அதனால் இணையதளத்தில் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி ஏராளமான பெண்கள் சன்னா மரின் ஆதரிக்கும் வகையில் அதேபோன்று ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பிரபல பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ள சன்னா மரின் அணிந்த பிளேசர் அவர் வகித்து வரும் பதவிக்கு தகுதியானது இல்லை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு நாட்டின் பிரதமரின் பங்கு ஒரு சிறந்த தலைவராக செயல்படுவதே மட்டுமன்றி ஃபேஷன் மாடலாக அல்ல என்று ஒருவர் கருத்து கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்று போட்டோ ஷூட் டுகளில் ஈடுபடுவதன் மூலம், சர்வதேச அரசியல் மற்றும் பொது மக்களிடம் தனது சொந்த உருவத்தையும் நம்பகத்தன்மையும் அவர் இழந்து வருகிறார். இந்தக் கருத்துக்கள் அனைத்தும் பின்லாந்தில் உள்ள பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |