Categories
உலக செய்திகள்

வகுப்பில் இருந்த ஆசிரியர்… திடீரென வந்து… தலையை வெட்டிய மர்மநபர்… அலறிய மாணவர்கள்…!!

பிரான்ஸில் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கின்ற பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் நேற்று மாலை 5 மணி அளவில் நடந்துள்ளது. அதனை கண்ட மாணவ மாணவிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். இந்தக் கொடூரத் தாக்குதல் பற்றிய அந்நாட்டு அதிபர் மாக்ரோன் லெபனான் கூறுகையில், “இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல். அதனால் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்க வேண்டும். இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ” தாக்குதல் நடத்திய மர்ம நபர் இடம் துப்பாக்கி மற்றும் பல ஆயுதங்கள் இருந்தன. அந்த ஆயுதங்களை கீழே போடுமாறு நாங்கள் கூறினோம். ஆனால் அந்த மர்ம நபர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அச்சுறுத்தக் கூடிய வகையில் செயல்பட்டதால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |