தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.