Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூரிக்கு ஏத்த சைடிஷ்…மிஸ் பண்ணாதீங்க…!!

உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு                        – அரை கிலோ
பெரிய வெங்காயம்                     – 3
தக்காளி                                            – 3
தயிர்                                                  – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது                               –  1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்                                    – கால் டீஸ்பூன்
தக்காளி                                             – 3
எண்ணெய்                                       – தேவைக்கேற்ப
உப்பு                                                   – தேவைக்கேற்ப
இஞ்சி துண்டு                                – ஒரு துண்டு

பொடிக்க தேவையானவை:

காய்ந்த மிளகாய்                – 4
மிளகு                                       – 2 டீஸ்பூன்
தனியா                                    – 2 டீஸ்பூன்
சீரகம்                                       – 1 டீஸ்பூன்
பட்டை                                    – 1
ஏலக்காய்                               – 1

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோலை  உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், மிளகு, தனியா தூள், சீரகம்,  பட்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். தக்காளி வெங்காயத்தை  பொடியாக நறுக்கி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கு, மசாலா கலவையை போட்டு பொரித்து எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காயவைத்து வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

மேலும் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளுடன், நறுக்கிய தக்காளி, தேவையானஅளவு  உப்பு சேர்த்து கொள்ளவும்.

இறுதியாக தயிர் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான, ருசிமிகுந்த உருளைக்கிழங்கு கிரேவி தயார்.

Categories

Tech |