Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் இளைஞரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கும்பல் ….!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே இளைஞரை 9 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டுத்தாக்குடி அருகே செங்கமேடு தெருவில் வசித்து வந்தவர் காளிதாஸ் அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடித்து விட்டு தெருவில் நடந்து சென்றபோது செல்வம் என்பவர் வீட்டில் இருக்கும் நாய் குறைத்ததாக கூறி தனது நண்பர்களுடன் செல்வத்தின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் தலைமறைவான அவர் முன்ஜாமீன் பெற்று நேற்று தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீதியில் இருந்தவர்களை மது குடித்துவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டிய காளிதாஸை ஒன்பது பேர் கொண்ட கும்பல் தட்டிக்கேட்டு கம்பி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு கணேசன் என்பவரை வெட்டிக் கொன்ற மண்டை நிதிஷ்குமார், நிதிஷ்குமார், சரவணன், அகிம்கான் ஆகிய நால்வரும் மதுரை ஜெ. எம் நான்காவது நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் என்பவர் திருபுவனம் கோட்டையில் மறைந்திருந்த நிலையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Categories

Tech |