சோயா கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
சோயா – ஒரு கப் வேக வைத்து நறுக்கியது
வெங்காயம் – 1
தக்காளி – 1
பட்டை – ஒன்று
கடுகு – சிறிது
அன்னாசி மொக்கு – ஒன்று
கிராம்பு – ஒன்று
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்
மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை
சீரகத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
கேசரி பவுடர் – சிறிது
பச்சை மிளகாய் – ஒன்று
கருவேப்பிலை – சிறிது
சோயா, சில்லி சாஸ் – சிறிது
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, அன்னாசி மொக்கு போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மசாலா தூள், சீரகத்தூள் என வகைகளை ஒன்றாக போட்டு, தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
பிறகு கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். மேலும் வேக வைத்து நறுக்கிய சோயாவையும் சேர்த்து வதக்கவும்.
குக்கரை மூடி வேக வைக்கவும். பின்னர் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்தபின் திறக்கவும். இறுதியில் அதனுடன் சோயா சாஸ், சில்லி சாஸ் கலந்து சிறிது நேரம் கிளறி இறக்கவும். இப்போது சுவையான சோயா கிரேவி தயார்.