சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும், மேலும் முக்கியமான பணிகளை ஆற்ற வேண்டியதிருக்கும். எந்தவொரு செயலையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
இன்று பணியிடச்சூழல் சுமுகமாக இருக்காது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு சிறிது பதட்டத்தை ஏற்படுத்தும். இன்று உங்களின் பிரியமான அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒற்றுமையை தக்கவைக்க நீங்கள் அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும். ஆன்மிக பயணம் காரணமாக இன்று நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். பணத்தை கவனமாக கையாள வேண்டும். தந்தையின் உடற்நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.