ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நவராத்திரியின் முதல் நாளான இன்று மாத சைலபத்திரியை வணங்குவதாக கூறி உள்ளார். அன்னையின் ஆசீர்வாதங்களுடன் நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட அன்னையின் ஆசீர்வாதங்கள் பலன் அளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாத கைலபத்திரியை போற்றும் பாடலுடன் கூடிய வீடியோவையும் திரு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.