நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட திறந்துவிட வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தளர்வுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், கேளிக்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது. எனவே அவற்றைச் சார்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை சரணாலயம் திறக்கப்படாததால் அது சார்ந்த தொழிலை நம்பி உள்ள வாகன ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். முதுமலையை ஒட்டிய பந்திப்பூர் சரணாலயம் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதனையும் முதுமலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.