Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையா இருந்துட்டு இப்படியா ? வெறும் 200 ரூபாய் தானே…. பிரபல நடிகையால் பரபரப்பு….!!

அருவி  பட   நடிகை   மாஸ்க்  அணியாததால்  அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

தற்போது கொரோன தொற்று பரவி வருவதால் நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.  அப்போது அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டது. தற்பொழுது தளர்வுகள் அகற்றப்பட்டு சுற்றுலாத் தலங்ககளும்  செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.  வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இதில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் சுகாதாரத்துறையின்  சார்பில் அபராதம் விதிக்கப்பட்டும் வருகின்றது. அந்நிலையில் அங்கு வந்த நடிகை அதிதி பாலன் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் சுகாதார துறை அதிகாரிகள் ரூபாய் 200 அபராதம் விதித்தனர்.  ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால்  அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர் அவர் 200 ரூபாய் அபராதம் கட்டியதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |