கேரளாவில் நேற்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை சமீப நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதுகாப்புக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1139 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 991 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 9,604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.