பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு இருந்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அத்வானி உள்ளிட்ட அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டத்தையும் குற்றவியல் நடைமுறை சட்டத்தையும் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிகளை பரிந்துரைக்க ஒரு அறிவுசார் குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட உள்ளது.