Categories
தேசிய செய்திகள்

ஜெகன் மோகனுக்கு எதிராக குவியும் புகார்கள்…!!

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் கடிதம் அளித்ததற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக என்.வீ. ரமணா இருக்கிறார். இவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆந்திரா நீதிமன்றச் செயல்பாடுகளில் மாநில அரசுக்கு எதிராக தனது செல்வாக்கை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கடிதம் எழுதினார்.

இந்நிலையில்  நீதிபதி ரமணா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கறிஞர் சுனில் குமார் சிங் என்பவர் தலைமை நீதிபதியிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நடத்தப்பட்ட உயர்நிலைக் கூட்டத்தில் ஜெகனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அதில் நீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கும் விதமாக மூத்த நீதிபதியை பகிரங்கமாக விமர்சனம் செய்ததை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜெகன்மோகன் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

Categories

Tech |