நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக சென்னையில் அதிகாலை வேளையில் மழை பெய்து வருகின்றது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை அதிகபட்சமாக பெருங்களூர், வல்லத்தில் தலா 13 சென்டிமீட்டர், கீழ் பெண்ணாத்தூர் 11 சென்டிமீட்டர், தஞ்சை 9 சென்டிமீட்டர், காரியாபட்டி, சமயபுரம், அரிமலம், லால்குடியில் தலா 8 சென்டி மீட்டர், வானூர், இலுப்பூரில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்கிறது ஆந்திரா- தெலுங்கானா நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.