கேரளாவில் இருக்கும் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் திரு ராகுல் காந்தி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தலைநகர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாளை கோழிக்கோடு செல்லும் காங்கிரஸ் எம்.பி. திரு ராகுல் காந்தி அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்கிறார். அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
பின்னர் வயநாடு செல்லும் திரு ராகுல் காந்தி நாளை மறுநாள் வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து வரும் 21ஆம் தேதி மனந்தவடி அரசு மருத்துவமனைக்கு சென்று திரு ராகுல் காந்தி அதனை பார்வையிடுகிறார். பின்னர் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் டெல்லி திரும்புகிறார்.