Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… இவ்வளவு குறைஞ்சிருச்சா…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் மேலும் 3,914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,87,400 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,642 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,37,637 ஆக அதிகரித்துள்ளது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 88,643 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 86,96,455  ஆக இருக்கின்றது. தமிழகத்தில் தற்போது வரை 39,121 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |