புதினா ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – 1 கட்டு
புளிக்கரைசல் – 1 கப்
கீறிய பச்சை மிளகாய் – 2
வெந்த துவரம் பருப்பு – அரை கப்
மிளகு,சீரகம், ரசப் பொடி – 2 டீஸ்பூன்
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப கருவேப்பிலை – ஒரு கைபிடி
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், துவரம்பருப்பு, தனியாத்தூள் சேர்த்து நன்கு வறுத்து, பின் மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
வாணலியில் புளிகரைசல், உப்பு, ரசப்பொடி, பச்சை மிளகாய், அரைத்த கலவை, வேக வைத்த துவரம் பருப்புசேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்து அரைத்த பொடி, புதினா தூவி இறக்கவும்.
இறுதியில் நெய்யில் வதக்கிய கடுகு, கருவேப்பிலையை அதில் ஊற்றி பரிமாறினால் சுவையான புதினா ரசம் தயார் .