திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குயிலம் ஊராட்சியில் 2017-18 ஆம் ஆண்டு பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் குயிலம் ஊராட்சி செயலாளரும், திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமாண திரு காசி என்பவர் இறந்தவர்களின் பெயர்களில் வங்கி கணக்கு தொடங்கி வீடு கட்டி முடித்து விட்டதாக கூறி நான்கு முறை வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுபோல் இறந்தவர்களின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.