Categories
கிரிக்கெட் விளையாட்டு

பரபரப்பான போட்டி…. இறுதி வரை சூடு பிடித்த ஆட்டம்… சூப்பர் ஓவரில் கொல்கத்தா அசத்தல் வெற்றி …!!

கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி சூப்பர் ஓவர் சென்ற நிலையில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஐதராபாத் அணிகள் மோதிய 35 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்ததால் தான் போட்டி சமன் ஆகியது.

பின்னர்  சூப்பர் ஓவருக்கு சென்ற ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்தார் லோக்கியா பெர்குசன். முதல் பந்தில் வார்னர் ஆட்டமிழக்க, 3ஆவது பந்தில் Samad சமாத் ஆட்டமிழந்தார்.இதனால் வெறும் 2 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எட்ட களமிறங்கிய கொல்கத்தா அணி அசத்தலான வெற்றி பெற்றது.

Categories

Tech |