800பட சர்சையை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பு, மேடைப் பேச்சை தவிர்த்தார்.
மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கடந்த சில நாட்களாக அவருக்கு எதிரான விமர்சனங்கள், விவாதங்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. முத்தையா முரளிதரன் இனப்படுகொலையின் போது இலங்கைக்கு ஆதரவாக இருந்தார். இனப்படுகொலை நடத்திய ஒரு நாட்டின் வீரர் படத்தில் தமிழ் நடிகர் நடிக்கக்கூடாது என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.
இது சமூகவலைதளங்களிலும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வந்தது. 800 படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய்சேதுபதி எந்த முடிவும் எடுக்காத நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த விஜய் சேதுபதி 800 பட சர்ச்சை காரணமாக மேடைப் பேச்சு மற்றும் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்தார். இருந்தாலும் விஜய் சேதுபதி பழத்தில் இருந்து விலகுவது குறித்து விரைவில் அறிவிப்பார் என்று பலரும் காத்திருக்கின்றனர்.