Categories
சினிமா தமிழ் சினிமா

28ஆவது பிறந்தநாளில் தீடீர் சர்ப்ரைஸ்…. உற்சாகத்தில் கீர்த்தி சுரேஷ் …!

பிறந்த நாளை கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்கு கிடைத்த சப்ரைஸ்யாக  தமிழ் மற்றும் தெலுங்கில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் இணைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா அழகு தேவதையாக இடம் பிடித்துயுள்ளவர். தற்போது அவர்   நடிப்பில் வெளியான  ‘குட் லக் சகி’ எனும் படம் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன் முறையாக கைகோர்த்து  சிவா இயக்கும்  ‘அண்ணாத்த’ படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தனது 28வது பிறந்தநாளை 2 நாளுக்கு முன் கொண்டாடி இருந்தார் . பிறந்த நாளில் அவருக்கு திடீர் சப்ரைஸ் ஒன்று நடந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், மகேஷ் பாபு நடித்து வரும் ‘Sarkaru Vaari Paata’ எனும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் மூலம் அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |