தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து வந்த மாணவன் தான் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். 12 ஆண்டிற்கு பின்னர் மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து, நீட் தேர்வில் 180 கேள்விகளில் 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பாக e-box நிறுவனத்தின் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே இலவச பயிற்சியை அரசு வழங்கும். இரண்டாவது முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தனியார் மூலமாக பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும். மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் சட்டம் இயற்றி இருக்கிறார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பு கிடையாது. அதுகுறித்து எந்த ஒரு ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை”என்று அவர் கூறியுள்ளார்.