Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவிரி வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படுமா…?

வரும் ஜனவரி மாதம் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் 100 பொக்லைன் இயந்திரம் கொண்டு அடிக்கல் நாட்டு உள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.31 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் அடிக்கல் நாட்டி விழாவில் பேசினார். அப்போது 100 ஆண்டு கால திட்டமாக விவசாயிகள் கோரிக்கை காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது என்றார்.

இந்த திட்டத்தில்  நிறைவேற்றுவார்களா என்று மாற்றுக் கட்சியினர் பேசி வருவதாகவும், உறுதியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும்.

விரைவில் பணிக்கான டெண்டர் விடப்பட்டு வரும் ஜனவரி மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்திற்கான பூமி பூஜையை  100 பொக்லைன் இயந்திரம் கொண்டு  தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மஹேஸ்வரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலே ஆறுமுகம் உள்ளிட்ட அரசுத் துறை கல்வித் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |