கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்த 111 பவுன் நகைகள் 8 லட்சம் ரூபாய் பணம் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி ராம்குமார் ஆகியோர் நேற்று இரவு வழக்கம் போல் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். ராம்குமார் வீட்டின் பின்புறம் ஜன்னலை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வயலுக்கு எடுத்துச் சென்று அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து மணி என்பவர் வீட்டில் இருந்து அதே பாதையில் பீரோவை தூக்கிச் சென்ற 74 சவரன் தங்க நகைகளையும் 6 லட்சம் ரூபாய் ரொக்கதையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
மணியின் மகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்வதற்காக சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊரான ஆலம்பாடி வந்துள்ளார். அவரது திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் பற்றிய விபரங்களை முன்கூட்டியே அறிந்தும் நோட்டமிட்டும் கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இருவரது வீடுகளிலும் மொத்தம் 111 சவரன் தங்க நகைகள் வெள்ளிப் பொருட்கள் 8 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது.