Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான…பெப்பர் பட்டாணி மசாலா ரெசிபி…!!

பெப்பர் பட்டாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

பட்டாணி                                                           – 2 கப்
பெரிய வெங்காயம்                                      – 1
தக்காளி                                                              – 4
இஞ்சிப்பூண்டு விழுது                                    – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்                                                      –  அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்                                       – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள்                                                – 1 டீஸ்பூன்
தனியாத்தூள்                                                   – 1 டீஸ்பூன்
எண்ணெய்                                                        – 3 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை                                              – ஒரு கை அளவு
உப்பு                                                                      –  சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க தேவையானவை:

மிளகு                                  – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம்                                   – 2 டீஸ்பூன்
சோம்பு                                 – அரை டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, சிறிதளவு தண்ணீர், உப்பு  சேர்த்து வேக வைக்கவேண்டும். வெங்காயம், தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி  கொள்ள வேண்டும்.

மிளகு, சீரகம்,சோம்பு  ஆகியவற்றை எடுத்து, வாணலியியை சூடாக்கி அதில் வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுக்க வேண்டும்.

அடுத்து, கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.

அதனுடன் வேக வைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில், அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அதை கொதிக்க வைத்த கலவையில் ஊற்றி இறக்கினால் சுவையான பெப்பர் பட்டாணி மசாலா தயார் .

Categories

Tech |