உருளைகிழங்கு கொஸ்து செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2 நீளவாக்கில் நறுக்கியது
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
உப்பு -1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
மஞ்சள்தூள் -2 சிட்டிகை
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மல்லித் தூள் -1 ஸ்பூன்
இட்லி மாவு – 1 கரண்டி
கொத்தமல்லி – 2 கொத்து
கருவேப்பிலை -2 கொத்து
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்குஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து சிறிது நல்லெண்ணை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
அதனை தொடர்ந்து பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும். மேலும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு கிளறி விடவும்.
பின்னர் மூன்று டம்ளர் தண்ணீர் கலந்தவுடன், குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து, 1 கரண்டி இட்லி மாவை எடுத்து அதனுடன் கலந்து அடுப்பில் 1 கொதி வந்ததும் இறக்கவும்.
இதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான உருளைக்கிழங்கு கொஸ்து தயார்.