Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (20-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

20-10-2020, ஐப்பசி 04, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.19 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.

கேட்டை நட்சத்திரம் பின்இரவு 02.12 வரை பின்பு மூலம்.

மரண யோகம் பின்இரவு 02.12 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

மாத சதுர்த்தி.

விநாயகர் வழிபாடு நல்லது.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

நாளைய ராசிப்பலன் –  20.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் இருக்கும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்கள் விஷயங்களில்  தலையிடாமல் இருப்பது நல்லது.வெளியிடங்களில் வார்த்தைகளை விடும் போது கவனமாக பேசுங்கள் அதுவே நல்லது.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். சுபகாரியங்களில் முன்னேற்ற நிலையிருக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் உத்தியோகத்தில் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் ரீதியில் வெளியூர் பயணம் நல்ல மாற்றத்தை கொடுக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பெரியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.புதிய உத்தியோகம் தொடங்கும் முயற்சி முன்னேற்றத்தை கொடுக்கும். கடன் கைக்கு வந்து சேரும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் வீட்டில் சிறு சிறு மனக்கஷ்டங்கள் இருக்கும். சுபகரியங்களில் இழுபறி நிலை இருக்கும். கடின உழைப்பால் தொழிலில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தடையாக இருந்த ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உருவாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பணவரவு நெருக்கடி குடும்பத்தில் இருக்கும். உடல்நிலையில் பாதிப்பு இருக்கும்.பொதுவாக ரீதியில் வெளி பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள்.எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

கன்னி

உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.தொழிலில் உடன் பணிபுரிவோர்களால் அனுகூலம் உண்டாகும்.உத்தியோக ரீதியில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பழைய பாக்கி வசூலாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே நல்லது. வீட்டில் ஒற்றுமை குறைவு எடுக்கும். உத்யோகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நிதானமாக இருங்கள் அதுவே நல்லது.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு இருக்கும். சுபகாரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். தொழிலில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் இருந்த மந்தநிலை நீங்கும். வருமானம் இரட்டிப்பாகும். உடல்நிலை சீராக இருக்கும்.வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத செலவு கூடும். குழந்தைகளால் மன கஷ்டம் உண்டாகும்.விட்டுக்கொடுத்து செல்வதினால் பிரச்சனைகள் விலகும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர். தொழிலில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு இருக்கும். உற்றார் உறவினருடன் இருந்த மனஸ்தாபம் விலகும். தொழிலில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வீதியில் புதிய நட்பு கிடைக்கும். வங்கிக்கடன் கிடைக்கப்பெறும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கள நிகழ்வு நடக்கும். குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும்.தொழில் செய்பவர்கள் தொழிலில் புது உற்சாகமாக செயல்படுவார்கள். பெரியவர்களின் அறிமுகம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். வியாபார ரீதியில் சிறப்பு அடைவீர்.

மீனம்

உங்கள் இராசிக்கு உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வீட்டுத் தேவைகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். சிக்கனமாக இருங்கள் அதுவே நல்லது. உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

Categories

Tech |