ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சுட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள மெல்ஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் ஒன்றிணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
அதன்பிறகு பயங்கரவாதிகள் மற்றும் கூத்து படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், அடையாளம் தெரியாத பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த தகவலை காற்று மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.