தெலுங்கானாவில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையால் தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அதனால் அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகையை அறிவித்துள்ளார். அதில் மழையால் பாதிக்கப்பட்ட,தாழ்வான பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியாகவும், மழையால் முழுவதும் சேதம் அடைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு லட்சம் ரூபாயும், பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு பெய்து வரும் தொடர் கனமழையால் பெரும் வெள்ளம் மற்றும் மழையில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 பேர் இறந்துள்ளனர்.