பாஜகவிற்கு பாதம் தாங்கும் அடிமையாக முதல்வர் பழனிச்சாமி இருக்கின்றார் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் திமுகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் காணொளி மூலம் கலந்துகொண்ட மு க ஸ்டாலின் பேசும்போது,பெரியாரை,பேரறிஞர் அண்ணாவை, திராவிட முன்னேற்றக் கழகத்தை போற்றுகின்ற விழா தான் முப்பெரும் விழா. அதனால் தான் கொரோனா காலத்திலும் கூட நாம் எல்லோரும், நமது கடமையிலிருந்து தவறாமல் பல்வேறு பணிகளை தொடர்ந்து கொண்டு வருகின்றோம். ஆனால் இந்த கொரோனா காலத்திலும் விடாமல் கொள்ளையடிக்க கூடியவர்கள் கையில ஆட்சி அதிகாரம் சிக்கி இருக்கு.
நான் இந்த அமைச்சரவையை கிரிமினல் கேபினட், கரப்ஷன் கேபினட் அப்படின்னு தொடர்ந்து சொல்லிவிட்டு தான் இருக்கேன். அதுதான் என்னோட பழக்கமா இருக்கு. ஏனென்றால் ஒரு அமைச்சரவையே ஒட்டுமொத்தமா ஊழல் மாயமா இருக்கு அப்படின்னா அது அதிமுக அமைச்சர் அவைதான். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் தான் இந்த அமைச்சரவை. இந்த அமைச்சரவைக்கு தலைமை தாங்கக் கூடிய ஒருவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. சிபிஐ விசாரணைக்கு உட்பட்டவர்தான் என்று உங்களுக்கு தெரியும்.
4 ஆயிரத்து 838 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த ஒப்பந்தங்களைமே உறவுகளுக்கும், பினாமிகளுக்கும் மட்டுமே கொடுத்தார் பழனிச்சாமி. முதலமைச்சர் பழனிசாமி மீதும் ஊழல் தடுப்பு பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரிய பொது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததை கண்டித்து திமுக நீதிமன்றம் சென்றது. அதில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். வெளிப்படையான, நேர்மையான, நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டத்தை முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றுவிட்டார்.
தன் மீதான புகார்களை எல்லாம் சிபிஐ விசாரிக்கும் போது, அந்த விஷயம் தெரிஞ்ச உடனே முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகி இருக்கணும். வழக்கு விசாரணையை தைரியமாக எதிர்கொண்டு இருக்கணும், தன்னை நிரபராதி என்று நிரூபித்து விட்டு பதவி அடைவேன் என்று சொல்லி இருக்கணும். ஆனால் அவர் உச்ச நீதிமன்றம் தடை வாங்கி விட்டார். அதனால் அவர் பதவியில் இருக்கின்றார். பாஜகவிற்கு பாதம் தாங்கும் அடிமையாக இருக்க பழனிச்சாமி சம்மதித்த காரணத்தினால் தான் அவர் இப்போது வெளியில் இருக்கின்றார். இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிலை என்று முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.