Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு பாராட்டுறீங்க? அவரு என்ன தியாகியா ? நழுவிய OPS …!!

வரும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க போகுது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட திமுக சார்பாக முப்பெரு விழா நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசும்போது, முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். இருவர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை சுமத்தினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின்,

துணை முதலமைச்சர் அப்படின்னு ஒருத்தர் இருக்காரு. ஓ பன்னீர்செல்வம் உங்க எல்லாருக்கும் தெரியும். அவரை இப்போது எல்லோரும் தியாகி என்று சொல்லிட்டு இருக்காங்க. ஏதோ அவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு தேடி வந்து விட்டதைப் போலவும், அதனை அவர் பழனிச்சாமிக்கு விட்டுக்கொடுத்து விட்டதைப் போலவும், அவரை எல்லோரும் பாராட்டி கிட்டிருக்காங்க.

அதிமுக கட்சியே தோற்க போகுது. தோற்க போற கட்சிக்கு பழனிச்சாமி வேட்பாளராக இருக்கட்டும்னு தந்திரமாக நழுவி விட்டார் பன்னீர்செல்வம். அதுதான் உண்மை, அதனால பன்னீர்செல்வம் தியாகியும் இல்லை, பழனிச்சாமி நிச்சயம் மீண்டும் முதல்-அமைச்சராக வர வாய்ப்பும் கிடையாது. நடக்க போற சட்டமன்ற தேர்தல் முடிவு காட்டத்தான் போகுது என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |