மது அருந்தும்போது சைட் டிஸ் இல்லாததால் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மங்காப்பூர் பகுதியை சேர்ந்தவர் பனாரசி. இவர் தனது நண்பர் கெய்க்வாட்டை இரவு உணவிற்காக தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார். அப்போது இரண்டு நண்பர்களும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வரை அவர்கள் மது அருந்தி கொண்டிருந்த போது நண்பர் கெய்க்வாட் சைட் டிஷ் முட்டை கறி கேட்டுள்ளார். அப்போது சைட் டிஷ் தயாரிக்கவில்லை என்று கூறியதால் நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த கெய்க்வாட் தனது நண்பரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பனாரசி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அவ்விடத்தை விட்டு கெய்க்வாட் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிய வர விரைந்து வந்த அவர்கள் பனாரசியை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு கெய்க்வாட்டை கைது செய்தனர்.