அதிமுக அரசின் கருத்தை மத்திய அரசின் கையில் சிக்கி உள்ளது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருச்சி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தொண்டர்களிடையே காணொளியில் பேசிய மு க ஸ்டாலின்.. அதிமுக அரசையும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், இந்த அமைச்சரவையில் அதிகமாக சம்பாதித்து வைத்தது யார் தெரியுமா ? அமைச்சர் வேலுமணி. அவர் மேல திமுக கொடுத்த புகார்களை சொல்லனும்னா… அதற்கே பல மணி நேரம் பிடிக்கும்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ் பி வேலுமணி எதிரான புகார்கள் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடும் வழக்கின் விசாரணையின்போது, அமைச்சர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால் விசாரணை கைவிட முடிவு பண்ணியதாக தமிழக அரசு தெரிவித்தது.
முதலமைச்சர் தொடங்கி அனைத்து துறை அமைச்சர்களும் ஊழல் புகார்களில் சிக்கிய அரசாங்கம் தான் இந்த அதிமுக அரசாங்கம். இந்த கொள்ளைக் கூட்டம் விரைவிலேயே விரட்டப்பட இருக்கின்றது. தாங்கள் அடிக்கின்ற கொள்ளையை மறைப்பதற்காகவே நானும் விவசாயி என்று சொல்லி நடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இப்படி ஊழல்கள் முறைகேடுகள் கொள்ளைகளில் மூழ்கி கிடக்கிறது. ஊழலில் மூழ்கிக் கிடப்பதால் மத்திய அரசிடம் தமிழ்நாட்டுக்கான அத்தனை உரிமைகளையும் எடப்பாடி அரசு இன்னைக்கு அடகு வைத்து விட்டது.
ஏன் என்று கேட்டால் ? அவர்கள் கழுத்து மத்திய அரசின் கையில் சிக்கியிருக்கிறது. தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் நாட்டிற்காக அதிமுக அரசு பேச ஆரம்பிச்சா ஊழல் வழக்குகளை கொண்டு வந்து இவர்களை முடக்கி விடுவார்கள். அதனால தான் அதிமுக பயந்து போய் கிடக்கு. இவர்களிடம் உண்மை இருந்தால், நேர்மை இருந்தால், மத்திய அரசு கிட்ட உரிமைக்காக போராட முடியும். ஆனால் அவர்களால் முடியவில்லை, ஏனென்றால் ஊழல் மூட்டைகளை எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சுமந்து கொண்டு இருக்கின்ற காரணத்தினால் நித்தமும் பயத்திலே நடுங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என முக.ஸ்டாலின் விமர்சித்தார்.