தமிழகத்தைவிட கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என அம்மாநில முதல்-மந்திரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முதல் மந்திரி பினராயி விஜயன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ” கேரளாவில் இன்று மட்டும் 5,022 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்திற்கும் மேல் எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை குருநாதா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது.
மேலும் 92,731 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தாலும் தமிழகத்துடன் ஒப்பிடுகையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிக அளவு தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தை விட அதிக அளவிலான மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.