காளான் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம் நறுக்கிய
தக்காளி – 2 நறுக்கியது
பட்டை – 3
கிராம்பு – 3
சோம்பு – அரை டீஸ்பூன்
கசகசா – கால் டீஸ்பூன்
தேங்காய் – கால் மூடி
மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
இஞ்சிப்பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
சுத்தம் செய்த காளானை வெந்நீரில் போட்டு கழுவி, பெரிய துண்டுகளாக வெட்டி தனியாக வைக்கவும்.
தேங்காயை சிறிய துண்டாக நறுக்கி அதனுடன், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கியவுடன் வெட்டி வைத்த காளான் துண்டுகளை சேர்க்கவும்.
பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதனுடன் தனியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான காளான் குருமா தயார்.