Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதல் கணவரின் மகன்…. கடித்து சித்ரவதை செய்த இரண்டாவது கணவர்…. உடந்தையாக இருந்த தாய்…!!

முதல் கணவருக்கு பிறந்த ஏழு வயது சிறுவனை தாய் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து அடித்து கொடுமைப் படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கும் இவரது முதல் கணவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் சசிகலாவின் தங்கை பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மூன்றாவது குழந்தையான 7 வயது சிறுவன் அனிஸ்க்கன் சசிகலாவிடம் வளர்ந்து வந்தார்.

இதனிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சசிகலா தக்கலையை சேர்ந்த முருகன் என்பவருடன் பழகத் தொடங்கி ஒன்றாக வசித்து வந்தார். அப்போது முருகன் மற்றும் சசிகலா இருவரும் சேர்ந்து சிறுவனை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். தேவையான உணவு மற்றும் உடை சிறுவனுக்கு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த சிறுவனை முருகன் கடுமையாகத் தாக்கி கை, கால், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் ஆழமாக கடித்து துன்புறுத்தியுள்ளார். சிறுவனின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுவனை மீட்டதோடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்த காவல்துறையினர் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தற்போது தலைமறைவான முருகனை தேடி வரும் காவல்துறையினர் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |