Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவூட் நடிகர் உடல் நிலையில் முன்னேற்றம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..

நடிகர் சஞ்சய் தத் அவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

இந்தி  பட நடிகரான சஞ்சய் தத்  தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளரர்.  இது குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக  சினிமா உலகிற்கு சிறிது காலம் விடை கொடுத்துள்ளதாக  விடை என தெரிவித்திருந்தார்.  இது   இந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது  சஞ்சய் தத்தின் உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இது பற்றி அவரது  குடும்ப  உறுப்பினர் கூறியிறுபதாவது;   சஞ்சய் தத் ஒருவகையான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் மும்பையில் சிகிச்சை பெற்று வந்தார்.  தற்போது அவர் உடல் நிலையில் முன்னேற்ம் இருப்பதாக உணரப்பட்ட பின்பு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளபட்டது.  மேற்கொள்ளப்பட்டது. கடவுளின் கருணையினாலும் அனைவரது ஆசியினாலும்  பரிசோதனையின் முடிவு மிகச்சிறந்ததாக அமைந்து சஞ்சய் தத்தின்  உடல்நிலையில் முன்னேற்றம்  இருப்பதை உறுதிப்படுத்தியது  எனக் கூறினார்.

இதற்கு முன்னரே  சஞ்சய் தத் கடந்த 14-ந் தேதியில்  வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் “தற்போது இது எனது வாழ்வின் அச்சுறுத்தல். ஆனால் அதை நான் வெல்வேன். புற்றுநோயில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்“ என்று தெரிவித்து இருந்தார். வரும் நவம்பர் மாதம் கே.ஜி.எப் சாப்டர் 2 படத்தில் நடிக்க தயாராக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |