Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உருண்டையான, மிக சுவையான…பூந்தி ரெசிபி…!!

பூந்தி செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு                                  – கால் கிலோ
நெய்                                                   – சிறிதளவு
கேசரி பவுடர்                                 – சிறிதளவு
சீனி                                                     – அரைகிலோ
டால்டா/ரீபைண்ட் ஆயில்      – தேவையான அளவு

செய்முறை:

சீனியை எடுத்து  ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு மூழ்கும் வரை கெட்டியான கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

கடலை மாவுடன் கேசரி பவுடர், தண்ணீர் சிறிது சேர்த்து தோசை மாவு போல் கரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய வைத்து கலக்கி வைத்த கடலை மாவை ஒரு கரண்டி ஊற்றி தேய்த்து எண்ணெயில்  போட்டு பொரித்து எடுக்கவும்.

எண்ணெயில், மாவு அதிகம் சிவகாமல் வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போட்டு சிறிது நேரம் உலர வைத்து பரிமாறினால் சுவையான பூந்தி ரெடி.

Categories

Tech |