Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முட்டை இருக்கா? இப்போவே இந்த சாதம் செய்யுங்க…!!

முட்டை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை                          – 3
நெய்/எண்ணெய்     – 2 மேஜைக்கரண்டி
சீரகம்                              – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 25 கிராம்  நறுக்கியது
வத்தல்                            – 5
உப்பு                                – தேவைக்கேற்ப
எலும்பிச்சை சாறு    –  2 சொட்டு

செய்முறை:

முதலில் 3 முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பின்பு சாதத்தை வடித்து எடுத்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் பாதி என்னை பாதியாக 4 மேஜைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் அரை தேக்கரண்டி சீரகம், 25 கிராம் சின்ன வெங்காயம் நறுக்கியது , வற்றல் 5, உப்பு (தேவைக்கேற்ப)  சேர்த்து, அடித்து வைத்திருக்கும் முட்டையையும் அதில் ஊற்றி நன்றாக கிளறவும்.

வதக்கி வைத்திருக்கும் முட்டை கலவையை, சாதத்தில் போட்டு கிளறி 2 சொட்டு  எலுமிச்சம்பழம் பிழிந்து விட்டால் முட்டை சாதம் தயார். அதை குருமா குழம்புடன் பரிமாறவும்.

Categories

Tech |