நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பற்றி திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் பற்றி திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டு இருக்கும் வக்கிர மிரட்டல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. அது மிகவும் ஆபத்து.
பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவது மட்டுமே கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இவ்வாறு வக்கீல் மிரட்டல் விடுத்துள்ள நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.
பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 20, 2020