Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தகராறு… 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து… தாய் தற்கொலை செய்துகொண்ட சோகம்…!!!

கரூர் மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் லாலாபேட்டை அடுத்துள்ள வீரிய பாளையத்தில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு மனைவி முத்துலட்சுமி, சுபிக்ஷா (8), திரிஷா (3), கிஷாந்த் (6) ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனால் முத்துலட்சுமி மிகவும் மனமுடைந்தார். செந்தில்குமார் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். மிகுந்த மன வருத்தத்தில் இருந்த முத்துலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அரளி விதையை அரைத்து என்குரு குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவரும் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மயங்கி விழுந்ததைக் கண்ட குழந்தைகள் மூன்று பேரும் கூச்சலிட்டனர். அதனால் அக்கம்பக்கத்தினர் அனைவரும் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

அதன் பிறகு குழந்தைகள் மற்றும் முத்துலட்சுமியை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |