தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரம் சேலம் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் வடக்கு தமிழக கடலோர மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 32 குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மலையாக சேலத்தில் 30 சென்டிமீட்டர், சிவகங்கை மாவட்டம் ஏழு செண்டி மீட்டர், ராஜபாளையம் ஆறு சென்டிமீட்டர், கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டம் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதன் காரணமாக சூறாவளி காற்று மணிக்கு நாற்பதில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வபோது 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.