மும்பையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுடன் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து கர்பா நடனமாடி மகிழ்ந்தனர்.
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தலைநகர் மும்பையில் கோர்க்கையோர் நகரில் அமைந்துள்ள நோஸ்கோ கொரோனா சிகிச்சை மையத்தில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் தங்களது மனவலிமையை வெளிப்படுத்தும் வகையில் கர்பா நடனமாடி மகிழ்ந்தனர். மருத்துவமனை ஊழியர்களும் அவர்களுடன் இணைந்து உற்சாகமான நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.