Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்…!!

டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி அவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த வசதியாக மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அதில் பாலிடெக்னிக் படித்து வரும் தான் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் கொரோனா ஊரடங்கால் அதன் முடிவு தாமதம் ஆனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அரியர் தேர்வுக்கு  கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது எனவும் தன்னை அறியத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மறு மதிப்பீடு முடிவு வருவதற்கு முன்பே அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்த கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், எனவே மாணவரின் நலன் கருதி அரியர் பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்த மேலும் ஒரு கடைசி வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மனுதாரர் மட்டுமல்லாது அனைத்து மாணவர்களின் நலன் கருதி இதே போன்ற நிலையில் உள்ள மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Categories

Tech |