Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் வழக்கு – கைது செய்யப்பட்ட நால்வரிடம் சி.பி.ஐ., விசாரணை

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிறையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

ஹத்ராஸில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்து சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அலிகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று அலிகர் சிறைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Categories

Tech |