Categories
உலக செய்திகள்

ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள்

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4-ம் இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லோவி இன்ஸ்டிடியூட் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் 81.6% புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. 76.1 சதவீதம் புள்ளிகளுடன் சீனா 2-வது இடத்திலும். 41 சதவீத புள்ளிகளுடன் ஜப்பான் 3-வது இடத்திலும்.

39.7 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால் அதன் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதேநேரத்தில் சீனாவின் பொருளாதாரம் நடப்பாண்டிலேயே மீண்டு உள்ளதால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொருளாதார ரீதியாக சீனா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |