Categories
தேசிய செய்திகள்

வானிலிருந்து பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி …!!

வானிலிருந்து பறந்து சென்று தரையில் உள்ள பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத் துறை வெற்றிகரமாக பரிசோதனை செய்து உள்ளது.

இந்திய விமானப்படைக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒடிசா மாநில கடற்கரை பகுதியில் mi-35 ரக ஹெலிகாப்டர்கள் இருந்து ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. எலினா ஏவுகணையின் மேம்பட்ட அம்சமாக கருதப்படும் இந்த ஏவுகணையை ஏவிய பின்பும் கூட இலக்கை மாற்றி அமைக்க முடியும். இந்த ஏவுகணை 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. சீனாவுடனான லடாக் எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் கடந்த 42 நாட்களில் 12 ஏவுகணைகளை இந்தியா பரிசோதனை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |