Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (21-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

21-10-2020, ஐப்பசி 05, புதன்கிழமை, பஞ்சமி திதி காலை 09.08 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.

மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு பூராடம்.

மரண யோகம் பின்இரவு 01.13 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சஷ்டி விரதம்.

முருக வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

 எம கண்டம் காலை 07.30-09.00,

 குளிகன் பகல் 10.30 – 12.00,

 சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

நாளைய ராசிப்பலன் – 21.01.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த நெருக்கடிகள் இருக்கும். கடன்கள் வாங்க கூடும். சிக்கனமாக இருப்பதன் மூலம் பணப்பிரச்சனை தீரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. உறவினர்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு மனக்குழப்பம் இருக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எதிலும் கவனமாக இருங்கள்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்பாக செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் உடனிருப்பவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்.உத்தியோக வளர்ச்சிக்காக புதிய திட்டம் முன்னேற்றத்தை கொடுக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு தொழில் பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.தொழிலில் சிலருக்கு திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் முன்னேற்றத்தை கொடுக்கும். மன அமைதி கிடைக்க பெறுவீர்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் செலவு அதிகரிக்கும். தொழிலில் உடன் என்பவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரும். ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது கொடுக்கும்.உதவிகள் கிடைக்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள்.

கன்னி

உங்கள் இராசிக்கு எந்த வேலை செய்தாலும் சுறுசுறுப்பில்லாமல் செய்வீர்கள். சிவ காரியங்களில் இடையூறு எடுக்கும். வீட்டில் அனுசரித்து சென்றால் கருத்து வேறுபாடுகள் விலகி  ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உருவாகும். அதை சரி இதில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய சொத்து வாங்க எண்ணம் கூடும்.உத்தியோகத்தில் புதிய கூட்டாளிகளால் லாபம் கிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் குழந்தைகளால் எதிர்பாராத செலவு வரும். எந்த முயற்சி செய்தாலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவதற்கு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். உறவினர்கள் உதவி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பணியில் வேலை சுமை குறையும்.

தனுசு

உங்களின் ராசிக்கு சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். உடல்நிலையில் பாதிப்புகள் நீங்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். தொழில் ரீதியில் லாபகரமாக இருக்கும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் கூடவே செலவும் அதிகரிக்கும். வீட்டிலிருந்த பிரச்சனை அனைத்தும் உறவினர்களால் நீக்கப்படும். தொழிலில் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. உத்தியோகத்தில் லாபம் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். உடல்நிலை சீராக இருக்கும். கடன்கள் வசூலாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் சிக்கல்கள் தீரும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கடன் தொல்லை தீரும்.

Categories

Tech |