புதிய வேளாண் மசோதாக்களை தர வலியுறுத்தி பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளிலும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாபில் முதல்வர் அமரிந்தேர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுருக்கிறது .
இந்த சட்டத்தின்படி மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் அம்மாநிலத்தில் அமல்படுத்த விடாமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சட்ட மசோதாக்களை நகல்களை கேட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்குள் படுத்துறங்கி விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய அரசில் இருந்து விலகிய சிரோமணி அகாலி தளம் கட்சி காங்கிரஸ் அரசு கொண்டு வரும் இந்த மசோதாக்களை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது.